கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி..!

0 321

காஞ்சிபுரம், நீலகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது.

புதுக்கோட்டையில் அன்னவாசல், குடுமியான்மலை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகள் சேறும் சகதியுமாக மாறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments