கொரோனாவுக்கான ரெம்டிசிவிர் மருந்து இந்தியாவில் ரூ.4800க்கு அறிமுகம்

0 9481

அமெரிக்க மருந்து நிறுவனமான மைலான் பார்மா கொரோனாவுக்கான ரெம்டிசிவிர் (Remdesivir) மருந்தை இந்தியாவில் 100 மிலிகிராம் 4,800 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கைலீட் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரெம்டிசிவீர் மருந்து கொரோனா சிகிச்சையில் சிறப்பான பலனை அளிப்பதாகக் கூறப்படும் நிலையில் உலக அளவில் அதற்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ரெம்டெசிவிர்  மருந்தை   மைலான் பார்மா நிறுவனம் டெஸ்ரெம் (Desrem) என்ற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மருந்தை தயாரித்து விற்க கைலீட் நிறுவனத்திடம் ஒப்புதல் பெற்ற இந்திய நிறுவனங்களான சிப்லா, ஹெட்டரோ ஆகியவை தங்கள் மருந்துகளுக்கு 5400 ரூபாய் வரை விலை நிர்ணயித்துள்ள நிலையில் அதைவிட குறைந்த விலையில் மைலான் பார்மா அறிமுகப்படுத்தவுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments