என்எல்சி அனல் மின் நிலைய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12ஆக உயர்வு

0 1721

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் ஏற்கனவே 8 பேர் பலியான நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

என்எல்சி அனல் மின் நிலையம் 2ல் கடந்த 1ம் தேதி திடீரென பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர்.

படுகாயமடைந்த 17 பேரில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் கடந்த 3ம் தேதி ஒருவரும், நேற்று 5ம் தேதி காலையில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனிடையே நேற்று மாலை மேலும் ஒரு தொழிலாளி பலியானார்.

இந்நிலையில் வைத்தியநாதன் மற்றும் இளங்கோவன் ஆகிய மேலும் 2 தொழிலாளிகள் இன்று காலையில் உயிரிழந்தனர். தொடர்ந்து பிற்பகலில் ஜோதிராமலிங்கம் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments