ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இறுகும் கட்டுப்பாடுகள்

0 1900

ஆன் லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், தேசிய நிறுவனங்களுக்கான ஆதரவை அதிகரிக்கவும், அரசு புதிய கொள்கை மாற்றங்களை எடுக்கும் என கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக இது தொடர்பாக அரசு நடத்தும் ஆலோசனைகளின் விளைவாக அமேசான், கூகுள், ஃபேஸ் புக் உள்ளிட்ட நிறுவனங்களின் வர்த்தகத்தின் மீது அரசின் கட்டுப்பாடு இறுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனை, ஆன்லைன் சில்லறை வர்த்தகம், குறுந்தகவல்கள் முறை உள்ளிட்ட அனைத்திலும் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறப்பதால், பாதிக்கப்பட்டுள்ள பல இந்திய நிறுவனங்கள், இந்த விவகாரத்தில் அரசின் ஆதரவை எதிர்பார்த்திருப்பதும் இந்த கொள்கை மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்திய நுகர்வோரின் நலனை கருதியும், நாட்டின் பாதுகாப்பு, வரிவிதிப்பு உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும் இந்த கொள்கை மாற்றங்கள் உதவும் எனவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments