சென்னையில் வங்கிகள் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும்

0 1363
முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட 4 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை திறப்பு

சென்னை காஞ்சிபுரம், திருவள்ளுவர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வங்கிகள் இன்று முதல் வழக்கமான நேரத்தில் செயல்படும்.

பொதுமக்கள் வங்கிகளில் பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 19ம் தேதி முதல் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் வங்கிகள் 33 சதவீத ஊழியர்களுடன் பிற்பகல் 2 மணி வரை மட்டும் இயங்கி வந்தன.

நேற்றுடன் முழு ஊரடங்கு நிறைவு பெற்றதால் இன்று முதல் வங்கிகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மதுரையில் முழு ஊரடங்கு 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் வங்கிக்கிளைகள் பிற்பகல் வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.பொதுமக்களுக்கான வங்கி சேவைகள் வழங்கப்படமாட்டாது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments