நான்கு நாட்களாக நடுக்கடலில் சிக்கித் தவித்த இலங்கை மீனவர்களை மீட்ட சென்னை கடலோர காவல்படை

0 7480

நான்கு நாட்களாக நடுக்கடலில் சிக்கித் தவித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் சென்னை கடலோர காவல்படையின் மீட்பு மையத்தின் சாதுர்யமான செயல்பாட்டால் காப்பாற்றப்பட்டனர்.

வங்க கடலில் விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒய்எம்.சம்மிட் என்ற சரக்குக் கப்பலின் அதிகாரிகள், சென்னையில் இருந்து சுமார் 170 நாட்டிகல் மைல் தொலைவில், நடுக்கடலில் படகு ஒன்றில் இந்த 6 பேரும் தத்தளிப்பதை இன்று காலை கண்டனர். அவர்கள் கடலோர காவல்படையின் மும்பை மீட்பு மையத்திற்கு அளித்த தகவல், சென்னையில் உள்ள கடலோர காவல்படை மீட்பு மையத்திற்கு வந்தது.  அதை அடுத்து சரக்கு கப்பலை தொடர்பு கொண்ட அதிகாரிகள், அந்த 6 பேரையும் பத்திரமாக மீட்க ஏற்பாடு செய்தனர். சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் உதவியுடன் அவர்களின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு சொந்த ஊரான திரிகோணமலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments