பழங்குடி மக்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பிய ஆஸ்திரேலியர்கள்

0 1198

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், இனவெறிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, காவல்துறையினரால் கொடுமைப்படுத்தப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

பழங்குடியினரின் பாரம்பரிய முறைப்படி துவக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, போலீஸ் காவலில் உயிரிழந்த தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் குறித்து பழங்குடி மக்கள் உருக்கமாக உரையாற்றினார்கள்.

ஆஸ்திரேலிய மக்கள் தொகையில், வெறும் 3 சதவீதம் வகிக்கும் பழங்குடியினர், அங்குள்ள சிறைச்சாலைகளில் 28 சதவீத இடங்களை நிரப்பி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments