ரூ.60 கோடி விலை கொடுத்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் வாங்கிய நம்பர் பிளேட்

0 4845

துபாயில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இந்திய மதிப்பில் 60 கோடி ரூபாய் செலவு செய்து நம்பர் பிளேட் வாங்கி உள்ளார்.

இந்தியாவை பொருத்தவரை வாகன நம்பர் பிளேட்டுக்களுக்கான எண்களை மட்டும் பயனர்கள் தேர்வு செய்யமுடியும். ஆனால் சில மேற்கத்திய நாடுகளில் சுருக்கெழுத்து அல்லது வார்த்தையை உருவாக்கும் வகையில் எழுத்துக்கள் மற்றும் எண்களையும் தேர்வு செய்ய அனுமதி உள்ளது.

அதே போல் துபாயில் சில மாதங்களுக்கு ஒருமுறை சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் நடைபெறும் ஏலத்தில் 80 சிறப்பு பதிவு எண்களை விலை கொடுத்து பயனர்கள் வாங்கலாம். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் பால்விந்தர் சிங் சாஹ்னி தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்காக டி 5 என்ற பதிவு எண்ணை ஏலத்தில் வாங்கியுள்ளார். தற்போதை நிலவரப்படி இந்த டி5 தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த நம்பர் பிளேட் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments