கண்கலங்கி, நா தழுதழுத்த மு.க.ஸ்டாலின் : ஜெ.அன்பழகன் படத்திறப்பு விழாவில் உருக்கம்

0 12650

கொரோனாவில் இருந்து மக்களை காக்க போராடியவர், கொரோனாவாலேயே மறைந்துவிட்டார் என, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சியில் நா தழுதழுக்க கண்கள் கலங்கியபடியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி, ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. ஜெ.அன்பழகன் படத்தை திறந்துவைத்து மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஜெ.அன்பழகன் குடும்பத்தார் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

ஜெ.அன்பழகன் இழப்பு கட்சிக்கு மட்டுமல்ல, தனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்று குறிப்பிட்ட அவர், கலைஞர் இருந்த  மேடையில் ஜெ.அன்பழகன் பேசிய பேச்சு ஒன்றை சுட்டிக்காட்டியபோது அழுதுவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments