தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை

0 870

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கியது.

 நாகை, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்துள்ளது.

 காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை வெளுத்து வாங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments