கொரோனாவால் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களைக் கண்காணிக்க செல்போன் செயலி - சென்னையில் அறிமுகம்

0 1447

கொரோனா பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களைக் கண்காணிக்கும் செல்போன் செயலியைச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். சிகிச்சை முடிந்து 14 நாட்களுக்கு அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி ஒரு சிலர் வெளியில் சுற்றுவதால் அவர்கள் மூலம் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. இதனால் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க GCC corona monitor என்கிற செல்போன் செயலியை உருவாக்கி உள்ளனர்.

இந்தச் செயலியைப் பாதிக்கப்பட்டோரின் செல்பேசியில் பதிவிறக்கிவிட்டால் அவர்கள் வீட்டில் இருந்து வெளியில் நடமாடினால் அது ஜிபிஎஸ் மூலம் தெரியவரும். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments