கொரோனா எதிரொலி.. ரயில்வேயில் புதிய நியமனங்கள் இல்லை..!

0 2031

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை அடுத்து, புதிய நியமனங்களை நடத்த வேண்டாம் என ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரம் பாதுகாப்பு தொடர்பான பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என ரயில்வே மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது. 2018 ல் அறிவிக்கப்பட்டு, தற்போது முடியும் கட்டத்தில் இருக்கும்  உதவி ரயில் டிரைவர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான 64,317 பணியிட நியமனங்களை மட்டும்  நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

காலியாக உள்ள 35,208 பொது பணியிடங்களுக்கான நியமன நடைமுறைகள், கொரோனா நிலைமை சீரடைந்த பிறகே மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments