கொரோனா தடுப்பு மருந்து - ஆகஸ்டு 15 இல் அறிமுகம்?

பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுவரும் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்டு 15ஆம் நாள் அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும், பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து முதன்முறையாக உள்நாட்டிலேயே கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
புனேயில் உள்ள தேசிய வைராலஜி மையத்தில் சார்ஸ் கோவ் 2 கிருமியில் இருந்து பிபிவி 152 கோவிட் வாக்சின் (BBV152 COVID Vaccine) எனப் பெயரிடப்பட்டுள்ள மருந்தை உருவாக்கி வருகின்றன.
அந்த மருந்தை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குக் கொடுத்து சோதிக்கப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். மருத்துவ முறையிலான அனைத்துச் சோதனைகளும் முடிவடைந்து ஆகஸ்டு 15ஆம் தேதி இந்த மருந்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்த முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ICMR-Bharat Biotech COVID-19 vaccine trial results to be released by August 15
— ANI Digital (@ani_digital) July 3, 2020
Read @ANI Story | https://t.co/LNoqdgXDQ4 pic.twitter.com/ttiTxuegE7
Comments