இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 59.52 சதவிகிதம் குணமடைந்துள்ளனர்

0 1570

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் விகிதம் 59 விழுக்காடாக உள்ளதாக நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 881 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், இதுவரை மொத்தம் 3 லட்சத்து 59 ஆயிரத்து 859 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 59 புள்ளி ஐந்து இரண்டு விழுக்காடாகும். குணமடைந்தோர், உயிரிழந்தோர் போக 2 லட்சத்து 26 ஆயிரத்து 947 பேர் தற்போதைய நோயாளிகளாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலானோர் குணமடைந்தோரின் வரிசையில் மகாராஷ்டிரம், டெல்லி, தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. அதிக விழுக்காட்டிலானோர் குணமடைந்த விகிதத்தில் சண்டிகர், மேகாலயா, ராஜஸ்தான் ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments