டீசல் விலை உயர்வால் மீன் பிடித் தொழில் பாதிப்பு

0 821

டீசல் விலை உயர்வால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ராமேஸ்வரத்தில் மொத்தமுள்ள 900 படகுகளில் 300 படகுகள் மட்டுமே  மீன்பிடிக்கச் சென்றதால் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடியது. இலங்கை கடற்படை தாக்குதலுக்கிடையே தாங்கள் பிடித்து வரும் நண்டு, மீன்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கூறும் மீனவர்கள், டீசல் விலை உயர்வால் படகுகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அண்டை மாநிலங்களைப் போல தமிழக அரசு வரிக்குறைப்புச் செய்து டீசல் விலையைக் குறைக்கத் தவறினால் தமிழகம் முழுவதும் மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments