மருத்துவர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள் - முதலமைச்சர் புகழாரம்

0 932

உயிர் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை தாம் இறைவனுக்கு நிகராக கருதுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  கொரோனா தொற்று பரவாமல் காத்திட நாடு முழுவதும் அயராது பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற பேரிடர் காலத்தில் கடமை தவறாமல் கண்ணியத்துடனும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை எனக் கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு தமது அரசு எப்போதும் துணை நிற்கும் எனக் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments