ஹாங்காங்கில் அமலுக்கு வந்த சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம்

0 1208

ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், சீனாவின் கைக்கு வந்து 23 ஆண்டுகள் நிறைவடையும் தினமான இன்று, பலத்த எதிர்ப்புகளையும் மீறி சீனாவின் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஹாங்காங்கில்,அரசு எதிர்ப்பாளர்களை விசாரிக்கவும், நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கவும் சீன அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது சீனாவை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் இனி ஹாங்காங்கில் சட்டம் அமல்படுத்தப்படும். சீனாவின் ஆதிக்கம் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக சுதந்திர முழக்கங்களை எழுப்புவோரை கைது செய்யுமாறு ஹாங்காங் காவல் அதிகாரிகளுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

அதையும் மீறி காஸ்வே பேயில் இன்று திரண்ட பலர் சீன ஆதிக்கத்திற்கு எதிரான பிரசுரங்களை வீசி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் பெப்பர் ஸ்பிரேக்களை தெளித்து விரட்டினர்.

சீன அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடக்கும் என கிடைத்த ரகசிய தகவல்களின் பேரில், புதிய சட்டம் மற்றும் அதன் 66 சரத்துக்கள், அவை அமலுக்கு வரும் வரை பொதுமக்கள் அறியாத வண்ணம் ரகசியமாக வைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments