12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் - அமைச்சர் செங்கோட்டையன்

0 7970

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே எலத்தூர் மற்றும் கடனசெட்டிப்பாளையம் பகுதிகளில் 3 கோடியே 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலைகளையும், குடிநீர் தொட்டிகளையும் பொதுமக்கள் பயன்பட்டுக்கு திறந்து வைத்த அமைச்சர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில் முதலமைச்சர் ஆலோசனைப்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார். மேலும் நிலைமை சீரான பின்பே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறிய அமைச்சர், பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments