சென்னையில் தக்காளி விலை கிலோ ரூ.70ஆக உயர்வு

0 1774

சென்னையில் தக்காளி விலை கிலோ 70 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சென்னையில் சில்லறை வியாபாரத்தில் நாற்பது முதல் 50 ரூபாய் வரை விற்பனையான 1 கிலோ தக்காளி, 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 80 முதல் 90ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம் 100 முதல் 110 ரூபாய்க்கும், 40ரூபாய்க்கு விற்பனையான உருளைக்கிழங்கு 60 ரூபாய்க்கும், 50ரூபாய்க்கு விற்பனையான கத்தரிக்காய் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெண்டைக்காய் விலை கிலோ 40 ரூபாயாகவும், முள்ளங்கி விலை கிலோ 40 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல் பிற காய்கறிகளின் சில்லறை விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு திருமழிசை மொத்த வியாபார சந்தையில் காய்கறிகள் விலை சற்று உயர்ந்திருப்பதும், வாகன வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதுமே காரணமென சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments