சுஷாந்த் சிங் மரணம் - கதாநாயகியாக நடித்த நடிகையிடம் விசாரணை

0 7049

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மர்ம மரணம் குறித்து போலீசார் நடிகை சஞ்சனா சங்கியிடம் விசாரணை நடத்தினர். வெளியாக உள்ள தில் பேச்சாரா படத்தில் சுஷாந்த்துடன் சஞ்சனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஏற்கனவே சுஷாந்தின் முன்னாள் தோழியாக நடிகை ரியா சக்ரவர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். நேற்று சஞ்சனா விசாரணைக்காக பாந்த்ரா காவல் நிலையத்தில் ஆஜரானார்.

பல மணி நேர விசாரணைக்குப் பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பினார். தமது டிவிட்டர் பக்கத்தில் சுஷாந்த் சிங்கைக் குறித்து உணர்ச்சிகரமான பதிவுகளை நடிகை சஞ்சனா பதிவிட்டிருந்ததையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments