குஜராத், பீகாரில் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு

0 1645

இடி மின்னலுடன் ஏற்பட்ட மழையால் மின்னல் தாக்கி பீகாரில் 11 பேரும், குஜராத்தில் 7 பேரும் உயிரிழந்தனர்.

குஜராத்தில் சவுராஷ்டிரா, ராஜ்கோட், ஜாம்நகர், கிர் சோம்நாத் உள்ளிட்ட பகுதிகளிலும், பீகாரில் சரண், பாட்னா, ஜாமுய் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் ஜாம்நகர் மாவட்டத்தில் 73 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கியதில் பீகாரில் மட்டும் இதுவரை 103 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் 11 பேர் மின்னல் தாக்கியதில் பலியாகி உள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments