மதுரை சித்த மருத்துவரின் கொரோனா மருந்து

0 2896

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் என்பவர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ என்ற சித்த மருந்தை நிபுணர் குழுவினர் பரிசோதித்ததில், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,  வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என கருதப்படுவதாகவும் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட மருந்து மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, அது தொடர்பாக நடந்த விசாரணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடக் கோரி சித்த மருத்துவர் சிப்பிரமணியன் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று நடந்த விசாரணையில் அரசு தரப்பின் விளக்கத்தை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments