இந்தியப் பகுதிக்குள் 423 மீட்டர் தூரம் ஊடுருவிய சீனா

0 9875

சீனா கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியப் பகுதிக்குள் 423 மீட்டர் தூரம் ஊடுருவி ஆக்கிரமித்திருப்பது சாட்டிலைட் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தப் பகுதியில் ஊடுருவிய சீன வீரர்களுக்கும், இந்திய ராணுவத்தினருக்குமான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீனத் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி நிலவரப்படி, 1960 முதல் சீனா உரிமை கோரி வரும் எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து 423 மீட்டர் தூரத்தை தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஆக்கிரமித்திருப்பதும் அங்கு 16 சீன ராணுவக் கூடாரங்கள் மற்றும் மிகப் பெரிய தங்குமிடம் அமைக்கப்பட்டிருப்பதும், 14 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதும் சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments