சாத்தான்குளம் நிகழ்வுடன் தொடர்புபடுத்தித் தொடர்பில்லாத வீடியோ பதிவு : சைபர்கிரைம் பிரிவினர் எச்சரிக்கை

0 6407

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற நிகழ்வைச் சாத்தான்குளம் சம்பவத்துடன் தொடர்புபடுத்திச் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருபவர்கள் குறித்துப் புலனாய்வு நடைபெற்று வருகிறது.

சாத்தான்குளம் சம்பவம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளையும் வதந்திகளையும் தொடர்பில்லாத வீடியோவையும் சிலர் பரப்பி வருவதாகப் புகார் வந்தது.

இதையடுத்துச் சென்னை சைபர்கிரைம் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப் போன்றவற்றில் பரவி வரும் வீடியோ மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற தனிநபர் தொடர்பானது எனத் தெரியவந்துள்ளது.

தனிநபர்கள், சமூகவலைத்தளக் குழுக்களில் தவறான தகவல்களை வதந்தியைப் பரப்புபவர்கள், பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments