கராச்சி தாக்குதல் - 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0 3273

கராச்சியில் பாகிஸ்தான் பங்குச்சந்தைக் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் 4 பேரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

சிந்து மாகாணத் தலைநகரான கராச்சியில் பாகிஸ்தான் பங்குச்சந்தை செயல்பட்டு வருகிறது. பங்குச்சந்தை செயல்படும் அதே கட்டடத்தில் தனியார் வங்கிகளின் தலைமையகங்களும் அமைந்துள்ளன. நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வரும் இந்தக் கட்டடத்துக்கு ஒரு காரில் வந்த 4 பேர் துப்பாக்கிகள், கையெறிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களைச் சுற்றி வளைத்தனர். அதன்பின்னர் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தாக்குதலில் ஈடுபட்ட நால்வரும் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நிகழ்ந்தபோது அந்தக் கட்டடத்தில் இருந்த பணியாளர்கள் பின்புற வாயில் வழியாக வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments