தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

0 1247

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், தொற்றுப் பகுதியை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண் போலத் தடுக்க வேண்டும் என்றும் தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறும், மக்களைக் காக்கும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் அரசு காக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments