எல்லையில் வட்டமிடும் போர் விமானங்கள் - பின்வாங்குமா சீனப்படைகள் ?

0 10023

லடாக் எல்லைப் பகுதியில் சீனா தனது படைபலத்தை அதிகரித்தவண்ணம் உள்ளது. எல்லையின் இருபகுதிகளிலும் சீனா- இந்திய வீரர்கள் மிக அருகாமையில் அணிவகுத்து நிற்கும் சாட்டிலைட் காட்சிகள் வெளியானதால் எல்லையில் இன்னும் பதற்றம் தணியவில்லை என்பது உறுதியாகிறது.

எல்லைப்பகுதியில் சீனா ஹெலிகாப்டர் இறங்குதளங்களை அமைத்து வருவதால் இந்தியாவும் தனது விமானப்படையை களமிறக்கியுள்ளது. எந்த ஒரு சவாலையும் சமாளிக்க இந்தியா தனது சுகோய்,மிக் 29 , ஜாகுவார் போர் விமானங்களை எல்லையருகே கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறது.

சுமார் 40 விமானங்கள் வரை அங்கு வட்டமிட்டுவருகின்றன. திபெத் விமான தளத்தில் சீனா இந்தியாவை குறிவைத்து தனது விமானப்படையை நிறுத்தி வைத்துள்ளது. ஆனாலும் சீனாவின் விமான தளங்கள் மலை உச்சியில் இருப்பதால் அவற்றுக்குத் தேவையான எரிபொருள்கள் , ஆயுதங்களைக் கொண்டு செல்லுவது தாமதமாகும்.

இது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாகும். எல்லையில் நிலவும் அச்சுறுத்தலால் சீனாவுக்கு  நிகராக இந்தியாவும் தனது படைபலத்தை அதிகரித்து வருகிறது. நவீன ஏவுகணைகளையும் இந்திய ராணுவத்தினர் எல்லையில் முன்நகர்த்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments