இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது

0 3426

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் மட்டும்  புதிதாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

உலக நாடுகளை கொரோனா உலுக்கும் நிலையில், இந்தியாவில் வைரஸ் தொற்று பாதிப்பு, குறிப்பிட்ட மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

மஹாராஷ்டிராவில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 5 ஆயிரத்து 24 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 53 ஆயிரத்தை நெருங்கியது. ஒரே நாளில் அங்கு 175 பேர் பலி ஆனதால், உயிர்ப்பலி 7 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லியில் புதிதாக 3 ஆயிரத்து 460 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனா பாதிப்பு 77 ஆயிரத்தை தாண்டி விட்டது.

தமிழகத்திலும் இதுவரை இல்லாத அளவில் கொரோனா புதிய உச்சம் எட்டி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது.

குஜராத்தை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்ட, உத்தர பிரதேசத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட, ராஜஸ்தானில் பாதிப்பு, 16 ஆயிரம் பேரும், மத்திய பிரதேசத்தில் சுமார்13 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா என பல்வேறு மாநிலங் களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்தது.

கேரளாவைப் பொறுத்தவரை, ஒரே நாளில் 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 5 லட்சத்தை
தாண்டி விட்டது. உயிர்ப்பலி,15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா புதிய உச்சம் எட்டினாலும், வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை, சுமார் 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

இதனிடையே, இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 58 புள்ளி 24 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments