பிரீமியர் லீக்: லிவர்பூல் சாம்பியன் ; 30 ஆண்டு கால கனவு நிறைவேறியது!

0 3175

இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் வென்றது.

இன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சியுள் நிலையிலேயே லிவர்பூல் அணி பட்டத்தை கைப்பற்றியுள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி கிரிஸ்டல் பேலஸ் அணியை 4- 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது . நடப்புச் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி நேற்று நடந்த ஆட்டத்தில் செல்சி அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. லிவர்பூல் அணியை விட மான்செஸ்டர் சிட்டி அணி 23 புள்ளிகள் பின்தங்கியதையடுத்து, லிவர்பூல் அணி பட்டத்தை கைப்பற்றியது .

தற்போது லிவர்பூல் அணி 31 ஆட்டங்களில் விளையாடி 86 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 7 ஆட்டங்களிலும் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றாலும், அந்த அணியால் 84 புள்ளிகளையே ஈட்ட முடியும். கடந்த 1990- ம் ஆண்டுக்கு பிறகு பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி பட்டத்தை வென்றது இல்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு, லிவர்பூல் அணியின் கனவு 2019-20 ம் ஆண்டு சீசனில் நிறைவெறியுள்ளது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் கடந்த ஆண்டு சாம்பியன் ஆனது லிவர்பூல் அணி. தொடர்ந்து பிரீமியர் லீக் பட்டத்தையும் வென்றிருப்பதால், ரெட்ஸ் அணியியின் ரசிகர்கள் கடும் உற்சாகமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments