'ஹூவாய் நிறுவனம் சீன ராணுவத்துக்கு சொந்தமானது' - பென்டகன்

0 29146

சீன ராணுவத்துக்குச் சொந்தமான 20 நிறுவனங்களை பென்டகன் பட்டியலிட்டுள்ளது. அதில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் இடம் பெற்றுள்ளது.

கால்வன் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீன தரப்பில் இரண்டு பேர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. சீனாவின் அடாவடி காரணமாக, அந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனம் சீனாவின் மிகப் பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாயுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதற்கிடையே, தங்களுக்கும் சீன அரசு மற்றும் ராணுவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஹூவாய் நிறுவனம் அறிவித்தது. 

இந்த நிலையில், சீன ராணுவத்துக்குச் சொந்தமான 20 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பென்டகன். அதில், இடம் பெற்றுள்ள நிறுவனங்களின் பட்டியல் வருமாறு,

1.Aviation Industry Corporation of China

2.China Aerospace Science and Technology Corporation

3.China Aerospace Science and Industry Corporation

4.China Electronics Technology Group Corporation

5.China South Industries Group Corporation

6.China Shipbuilding industry Corporation 7.

7.China State Shipbuilding Corporation

8.China North Industries Group Corporation

9. Huawei Technologies Co.10.

10.Hangzhou Hikvision Digital Technology Co

11.Inspur Group

12.Aero Engine Corporation of China

13.China Railway Construction Corportion

14.CRRC Corp.

15.Panda Electronics Group

16.Dawning Information Industry Co.

17.China Mobile Communications Group

18.China General Nuclear Power Corp.

19.China National Nuclear Power Corp.

20.China Telecommunications Corp.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் ஹாஃப்மேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த பட்டியலில் உள்ள நிறுவனங்கள் சீன அரசு, ராணுவம் அல்லது பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான அல்லது அவற்றால் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது அதனுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்கள் ஆகும். உங்களுக்குப் பொருள்களை சப்ளை செய்பவர்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியமானதாக உள்ளது. இப்போது, வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியல் அமெரிக்க கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு பெரிதும் உதவிக்கரமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

பென்டகனின் இந்த அறிவிப்புக்கு சீன வெளியுறவுத்துறை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சீனாவின் வெளிநாட்டு நிறுவனங்கள கட்டுப்படுத்தும் அரசுக்கு சொந்தமான Assets Supervision and Administration Commission அமைப்பு ஆகியவைஇதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ஹூவாய் நிறுவனமும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. அதேவேளையில், ஹிக்விஷன் நிறுவனம், ''இது ஆதாரமற்றது. எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் விவரங்கள் எப்போதும் திறந்தவெளியாக இருக்கின்றன. எங்கள் நிறுவனம் பட்டியலிடப்பட்ட சுதந்திரமான நிறுவனம் ஆகும். அமெரிக்கா எங்கள் நிறுவனம் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், நிறுவனம் குறித்த தவறான புரிதல்களை சரிசெய்யவும் தயார்'' என்று தெரிவித்துள்ளது 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments