துபாயில் இந்திய தம்பதியை கத்தியால் குத்தி கொன்ற பாக்,திருடன் கைது

0 2890

துபாயில் இந்திய தம்பதியை குத்தி கொலை செய்த பாகிஸ்தான் நபரை போலீசார் 24 மணி நேரத்திற்குள்ளாக கைது செய்தனர்.

துபாய் அரேபியன் ராஞ்சஸ் (Arabian Ranches) என்ற இடத்தில் உள்ள வில்லாவில் ஹைரன் அதியா, விதி அதியா என்ற தம்பதியினர் 2 மகள்களுடன் வசித்து வந்தனர்.

திருடும் திட்டத்தில் அந்த வில்லாவில் இரவு நேரத்தில் நுழைந்த பாகிஸ்தான் திருடன், 2000 திர்ஹம் பணத்தை எடுத்ததுடன், நகை ஏதாவது கிடைக்குமா என்று படுக்கையறையில் நுழைந்துள்ளான். சத்தம் கேட்டு எழுந்த தம்பதியிரை உயிர் போகும் வரை அவன் பலமுறை குத்தியதாக துபாய் போலீஸ் அதிகாரி ஜமால் அல் ஜல்லாப் தெரிவித்தார்.

தப்பிச் சென்ற திருடன் வேறு அமீரகத்தில் ஒளிந்திருந்ததை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என துபாய் இந்திய தூதர் விபுல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments