சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

0 16101

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் குடும்பத்துக்குத் தலா பத்து லட்ச ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கையின் பேரிலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பிக்க உள்ள உத்தரவின் அடிப்படையிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்துக்குத் தலா பத்து லட்ச ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments