ஆபரணத் தங்கம் விலை ரூ.37,000ஐ தாண்டியது

0 2169

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 37 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 610 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், இன்று கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 659 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேபோல் நேற்று 1 சவரன் தங்கம் விலை 36 ஆயிரத்து 880 ரூபாயாக இருந்தது. இன்று அந்த விலை 392 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து 272 ரூபாயாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கம் விலை அதிகரித்த போதிலும் வெள்ளியின் விலை லேசாக சரிவை கண்டுள்ளது.

நேற்று வெள்ளி விலை கிலோவுக்கு 53 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 100 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments