உலகளவில் ஒரே நாளில் 5,465 பேர் கொரோனாவுக்கு பலி

0 1154
உலக அளவில் 93.53லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

உலக அளவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 62ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 5ஆயிரத்து 465 பேர் பெருந்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் 863 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர பெரு, சிலி, பாகிஸ்தான், சவுதி அரேபியா  நாடுகளிலும் 3ஆயிரத்துக்கும் அதிகமானோர்  ஒரே நாளில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சுமார் 57ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 50 லட்சத்தை தாண்டியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments