நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 14ஆயிரத்தை கடந்தது

0 1135

நாட்டில் கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கையும் 4 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா நாடுகளுக்கு அடுத்து இந்தியா 4ஆவது இடம் வகிக்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 14,933 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 312 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதித்தாரின் எண்ணிக்கை 4,40,215ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,011ஆகவும் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு 1,78,014 பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து, 2 லட்சத்து 48 ஆயிரத்து 190 பேர் இதுவரை மருத்துவ சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 796ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,283ஆகவும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக உருவெடுத்துள்ள டெல்லியில், அத்தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 655ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,233ஆகவும் உயர்ந்துள்ளது. 3ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 794ஆகவும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments