சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது

0 1414

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

திங்கள் காலை நிலவரப்படி சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 172 ஆக உள்ளது. அதிக அளவாக ராயபுரம் மண்டலத்தில் ஆறாயிரத்து 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்டையார் பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐயாயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது, தேனாம்பேட்டை மண்டலத்தில் நாலாயிரத்து 967 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் நாலாயிரத்து 485 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகர் மண்டலத்தில் நாலாயிரத்து 385 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் மூவாயிரத்து 532 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டோரில் 60 விழுக்காட்டினர் ஆண்கள், 40 விழுக்காட்டினர் பெண்கள் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments