'குங்ஃப்ளூ' - கொரோனாவுக்கு டிரம்ப் வைத்த புது பெயர்!

0 6135

கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே முக்கிய காரணமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சவாட்டி வருகிறார். கொரோனா வைரஸ்க்கு கோவிட் 19 என்று உலக சுகாதார மையம் பெயர் சூட்டியுள்ளது. ஆனால், டிரம்போ ' சைனீஸ் வைரஸ்' என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார். இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. 'எந்த ஒரு வைரஸையும் குறிப்பிட்ட நாட்டுடன் தொடர்பு கொண்டு அழைக்கக் கூடாது ' என்கிற அடிப்படை விதி கூட டிரம்புக்கு தெரியவில்லை என்று சீன விமர்சித்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் மீண்டும் சீனாவை கடுமையாக தாக்கியுள்ள்ளார். டிரம்ப். ஓக்லஹோமாவின் துல்சாவில் சனிக்கிழமை தனது முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், சீன தற்காப்பு கலையான குங்பூவுடன் ஒப்பிட்டு குங்ஃப்ளூ என்று குறிப்பிட்டார். மேலும், வூகானில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது. இதை, பெய்ஜிங் மறுத்து வருகிறது. கொரோனா வைரஸை மேலும் 19 , 20 வகையான பெயர் சூட்டி அழைக்க முடியும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

ஓக்லஹோமா மாகாணத்தில் குறைந்தளவே கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. இங்கு, 356 பேர் கொரோனா தாக்கி இறந்துள்ளனர். எனினும், டிரம்ப் நடத்திய தேர்தல் பிரசார கூட்டத்துக்கு குறைந்தளவாக 19,000  பார்வையாளர்களே வந்திருந்தனர் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் ஓக்லஹோமாவில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments