தமிழகத்தில் உயிரிழந்த 757 பேரில் சென்னையில் மட்டும் 601 பேர் கொரோனாவுக்கு பலி

0 2354

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பலி 50 என்ற அளவை எட்டியுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 600 க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 493 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

சென்னையின் அருகாமை மாவட்டங்களான செங்கல் பட்டில் 121 பேரும். திருவள்ளூரில் புதி தாக 120 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தில் 64 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

இதுதவிர, கடலூரில் - 90, வேலூரில் - 87, திருவண்ணாமலை யில் - 77 , மதுரையில் 69 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்த 757 பேரில், 601 பேர், சென்னை யை ச் சேர்ந்தவர்கள்.

சென்னை யில் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments