முப்படை தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகளுடன் ராஜ்நாத் ஆலோசனை

0 1918

லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினர்.

லடாக்கின் கிழக்குப் பகுதியான கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்கள் இடையே அண்மையில் நேரிட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் முப்படை தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ரஷ்யாவில் 24ஆம் தேதி நடைபெறவிருக்கும் 2ஆம் உலக போரின் 75ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜ்நாத் நாளை மாஸ்கோ செல்கிறார். இதனால், முப்படை தலைமை தளபதி , முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடன் ராஜ்நாத் ஆலோசனை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments