சூரிய கிரகணத்தை ஒட்டி ஏழுமலையான் கோவில் மூடல்

0 1603

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முழுவதும் பக்தர்களுக்கான சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10.18 மணியளவில் தொடங்க உள்ள சூரிய கிரகணத்தை ஒட்டி நேற்று இரவு 8.30 மணியளவில் ஏகாந்த சேவைகளுடன் கோவில் நடை சாத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, கிரகணம் முடிந்ததும் மதியம் 2.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் தண்ணீரால் கோவில் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் அர்ச்சகர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

கிரகணத்தின் போது தரிகொண்டா வெங்கமாம்ப அன்னபிரசாத பவனும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments