புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு 21ம் தேதி நுழைவுத் தேர்வு

0 1668

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு நாளை நடைபெறவிருக்கும் நுழைவுத் தேர்வுக்கு ((Entrance exam))  தேவையான ஏற்பாடுகளை செய்து தரும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு 2020ம் ஆண்டு நுழைவுத் தேர்வு நாளை ((21.6)) நடைபெற இருப்பதாகவும், இதை அத்தியாவசிய நடவடிக்கையாக கருதி, அத்தேர்வு எழுத இருப்போருக்கு அளிக்கப்பட்ட அட்மிட் கார்டுகளை ((Admit card)) ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து மேற்கொள்ள அளிக்கப்பட்ட அனுமதியாக கருதும்படி கூறியுள்ளார்.

அத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், ஜிப்மர் நுழைவுத் தேர்வை சுமுகமாக நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து தர கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments