சீனாவுக்குள் இருந்து கொண்டே ஆதரவுக்குரல் ! பல்கலையில் இந்தியர் மீது நடவடிக்கை!

0 9942
ஜியாங்சு பல்கலைக்கழகம்

லடாக் கால்வன் பகுதியில் சீன ராணுவத்தினருடன் இந்திய படை வீரர்கள் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால், இந்திய மக்கள் சீனர்களுக்கு எதிராக கோபமான மனநிலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கிழக்கு சீனாவிலுள்ள ஜியாங்சு பல்கலையில் படித்து வந்த இந்திய மாணவர் கதுக்கசேரி என்பவர் சீனர்கள் குறித்து சமூகவலைத்தளத்தில் கேலி செய்யும் விதத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார் .

சீனாவில் ட்விட்டர் போன்ற சமூகவலைத் தளமான சைனா வெய்போவில் இந்திய மாணவ கதுக்கசேரி தன் பதிவை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது என்று சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, சீன நாட்டின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டு நடக்காததால் வெளிநாட்டு மாணவர் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜியாங்சு பல்கலை தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் கதுக்கசேரி மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸின் பிறப்பிடமான கருதப்படும் வூகானிலும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக, அவர்களில் பலர் தாய்நாடு திரும்பியுள்ளனர். இந்த மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு படிக்க செல்லும் போது, பலவித பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments