சென்னையில் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை

0 1717

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி களப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு ஊரடங்கு கால கட்டத்தில் காய்ச்சல் முகாம்களை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், ஆயிரக்கணக்கான களப்பணியார்கள் மூலம் வீடு வீடாக சென்று உடல் வெப்ப பரிசோதனை செய்வதை முடுக்கி விட்டுள்ளது.

களப்பணியார்களுக்கு வழங்கப்பட்டுள்ள தெர்மல் ஸ்கேனர் உடலின் வெப்ப நிலையை காட்டுவதோடு, 3 வண்ணங்களில் விளக்குகளும் எரிகின்றன. அதனை கொண்டு பரிசோதனை செய்யும் போது பச்சை நிறம் ஒளிர்ந்தால் காய்ச்சல் எதுவும் இல்லை, மஞ்சள் நிறத்தில் இருந்தால் லேசான காய்ச்சல், சிவப்பு நிறம் என்றால் தீவிர காய்ச்சல் என வகைப்படுத்துகின்றனர்.

உடனடியாக தங்கள் செல்போனில் உள்ள Gcc Corona monitor செயலி மூலமாக அதிகாரிகளுக்கு தகவலளிக்கப்பட்டு, அதன்மூலம் அறிகுறி உள்ள நபரை மருத்துவ குழுவினர் உடனடியாக பரிசோதனைக்கு அழைத்து செல்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments