ராகுல்காந்தி கருத்து - ராணுவ வீரரின் தந்தை வேண்டுகோள்

0 2577

லடாக்கில் சீனப் படையினரின் தாக்குதல் விவகாரத்தில் பிரதமரைக் காப்பாற்றுவதற்காகப் பொய் சொல்வதை அமைச்சர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கால்வன் பள்ளத்தாக்கு நிகழ்வு பற்றி மத்திய அமைச்சர்கள் பொய்யான தகவல்களைக் கூறுவதாக, ராணுவ வீரரின் தந்தை கூறும் வீடியோவை ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மூத்த அமைச்சர்கள் பொய் சொல்வது வருத்தமளிப்பதாகவும், பிரதமரைக் காப்பாற்றுவதற்காகப் பொய் சொல்வதை அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பொய்களைச் சொல்லி நமது ராணுவ வீரர்களை அவமதிக்க வேண்டாம் என்றும் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து ராணுவ வீரரின் தந்தை பேசிய மற்றுமொரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் சீனாவைத் தோற்கடிக்கும் வலிமை பெற்றது இந்திய ராணுவம் எனக் கூறியுள்ளதுடன், ராகுல்காந்தி இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments