செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா

0 925

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கெனவெ செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று 87 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 372ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர மாவட்டத்தில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதனால் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மருத்துவ சிகிச்சையில் 1,695 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். புதிதாக கொரோனா உறுதியானோரில் 87 பேரில் 70 பேர் சென்னைக்கு பணி நிமித்தமாக சென்று வந்தோர் ஆவர். எஞ்சிய 17 பேர், ஏற்கெனவே பாதித்தோருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments