கருப்பின இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு - போலீஸ் அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு

0 944

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த இளைஞரை சுட்டுக் கொன்ற வழக்கில் போலீஸ் அதிகாரி மீது மோசமான கொலைக்(felony murder) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்தைத் தொடர்ந்து அட்லாண்டாவில் உணவு விடுதி அருகே கருப்பின இளைஞன் ரேஷர்ட் புரூக்ஸை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் இனபாகுபாடுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.

மற்ற வாடிக்கையாளர்களின் வருகையை தடுக்கும் வகையில் உணவு விடுதி முன் காரை நிறுத்தி ரேஷர்ட் உறங்கிய தகராறில் போலீஸ் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ஃப் பதவிநீக்கப்பட்டதுடன் 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு போலீஸ் மீதும் மோசமான தாக்குதல், பதவிப் பிரமாணத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments