'கொரோனா தாக்குவதற்குள், முடிந்தளவு ஏழைகளுக்கு உதவிவிட்டேன் ! '- வீடியோ வெளியிட்டு அஃப்ரிடி உருக்கம்

0 4033

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அஃப்ரிடியை கொரோனா தாக்கியுள்ளது. கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருக்கிறார். சாகித் அஃப்ரிடி விரைவில் குணமடைந்து வர வேண்டுமென்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் உள்ளிட்ட பிரபலங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சோசியல் மீடியாவில் அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலவி வந்தன. குறிப்பாக, வென்டிலேட்டர் உதவியுடன் அஃபிரிடி சுவாசிப்பதாக வதந்தி பரவியது. இந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சாகித் அஃப்ரிடி உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், அஃபிரிடி கூறியிருப்பதாவது, '' என் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலவுகின்றன. முதல் 2,3 நாள்கள் எனக்கு கடினமானதாக இருந்தது என்பது உண்மைதான். இப்போது என் உடல்நிலை தேறி விட்டது. இனி , பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்களும் இந்த நோயை எதிர்கொள்ள துணிய வேண்டும். இல்லையென்றால், நாம் அதை விரட்ட முடியாது, என் மகள்களுடன் இல்லாத நிலை இருப்பது எனக்கு வருத்தத்தை தருகிறது.

கடந்த 8,9 நாள்களாக மருத்துவமனையில் இருப்பதால், என்னால் என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியவில்லை. என் அன்பும் முத்தங்களும் என்றும் அவர்களுக்கு உண்டு. இப்போதையை சூழலில் நம்மையும் பாதுகாத்து நம்மை சுற்றிருப்பவர்களையும் பாதுகாப்பதுதான் முதல் கடமை. இந்த பேன்டமிக் காலத்தில் நான் பாகிஸ்தான் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஏழை மக்களுக்கு உதவினேன். ரேசன் பொருள்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க சில பயணங்களை மேற்கொண்டேன்.

இதற்காக , ஏராளமான சுற்றுப்பயணமும் மேற்கொண்டேன். என்னை கொரோனா   தாக்கும் என்று முன்னரே தெரியும். ஆனால், சில நாள்களுக்கு முன்னதாகத்தான் என்னை கொரோனா தாக்கியது. அதற்குள், என்னால் முடிந்தளவுக்கு ஏழை மக்களுக்கு உதவியுள்ளேன். நான் குணமடைய வாழ்த்திய பாகிஸ்தான் மக்கள், மற்றும் உலக மக்களுக்கு நன்றி '' என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சாகித் அஃப்ரிடி தன் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மருத்துவமனைகளையும் சாகித் அஃப்ரிடி அறக்கட்டளை நடத்தி வருகிறது. இவருக்கு, நான்கு மகள்கள் உண்டு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments