எல்லையில் உயிரிழந்த ராணுவ உயர் அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபுவின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

0 3900

சீனாவுடன் நேருக்கு நேர் யுத்தம் செய்து உயிரைத் துறைந்த ராணுவ உயர் அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபுவின் உடல் நேற்றிரவு அவரது சொந்த ஊரான தெலுங்கானா மாநிலம் சூரியாபேட்டைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு உற்றார் உறவினர் சூழ சந்தோஷ் பாபுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

பீகார் மாநிலம் வைஷாலியில் உயிரிழந்த ராணுவ வீரர் ஜெய்குமார் சிங்கின் உடல் ் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதனால் அவருடைய இல்லத்தில் ஊர்மக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்த திரண்டிருந்தனர் இதே போன்று லடாக் எல்லையில் உயிரிழந்த மற்றொரு வீரரான மன்தீப் சிங்கின் உடலுக்கு பஞசாப் மாநிலம் பாட்டியாலாவில் அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்த காத்திருந்தனர்..

உயிரிழந்த வீரர்களின் உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments