தனிநபர் இடைவெளியை கண்காணிக்கும் சென்சார் கருவி

0 1663

பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை சென்சார் மூலம் கண்காணிக்கும் கருவியை கோவையை சேர்ந்த தனியார் தொழில்நுட்ப நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

Artificial intelligence தொழில்நுட்பத்தில் இயங்கும் இக்கருவி 30 வினாடிகளுக்கு ஒரு முறை படம்பிடித்து சென்சார் மூலம் தனிநபர் இடைவெளியை கண்காணிக்கிறது.

மக்கள் நெருக்கமாக இருந்தால் அதை கண்டறிந்து ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கருவியின் மூலம் 250 சதுர அடி பரப்பளவில் உள்ள கூட்டத்தை கண்காணிக்க இயலும். முதற்கட்டமாக, திருப்பூர் மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் சோதனை அடிப்படையில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments