நாளொன்றுக்கு பத்து லட்சம் பரிசோதனைகளை நடத்த வேண்டும் - கொரோனாவை கட்டுப்படுத்த பரிந்துரை

0 831

கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தினசரி சோதனையை 10 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் Centre for Cellular and Molecular Biology இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோருடன் கொரோனா குறித்து நடத்திய காணொலி விவாதத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.

கடந்த 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை, நாட்டில் தினமும் 1.15 லட்சம் முதல் 1.50 லட்சம் சோதனை நடத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய ராகேஷ் மிஸ்ரா, சோதனைகளின் எண்ணிக்கை மிகவும் முக்கியம் என்பதை, மும்பை தாராவியில் வைரஸ் தொற்று வெற்றிகரமாக  கட்டுப்படுத்தப்பட்டது காட்டுவதாக  குறிப்பிட்டார்.

பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாளொன்றுக்கு பத்து லட்சம் என்ற சோதனை எண்ணிக்கையை எட்டலாம் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments